பரபரப்பு… ஆசிரமத்தில் சகோதரிகள் இருவர் திடீர் தற்கொலை!


தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் சகோதரிகள் இரண்டு பேர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா நகரில் உள்ள பிரம்ம குமாரிகளுக்கான ஆசிரமத்தில் ஏராளமான பெண்கள் உறுப்பினர்களாக தங்கி உள்ளனர். அந்த வகையில், ஏக்தா (38), ஷிக்கா (32) ஆகிய இரு சகோதரிகளும் ஆசிரமத்தில் ஓராண்டாக தங்கியிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் கடிதம் எழுதிவைத்துவிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறப்பு குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து, தற்கொலை குறிப்பு மற்றும் அவர்களது மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்கொலை குறிப்பில் ஆசிரம ஊழியர்கள் 4 பேர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று பக்கம் கொண்ட தற்கொலை கடிதத்தில், ஆசிரமத்தின் ஊழியர்கள் 4 பேர் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தங்களுடைய 25 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து கடிதம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x