[X] Close

‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? - அக். 1-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு 


kiranbedi-news

  • kamadenu
  • Posted: 20 Sep, 2018 09:49 am
  • அ+ அ-

புதுச்சேரியில் தூய்மை பணிக்காக எடுக்கப்பட்ட பணிகள் தொடர்பாக அரசு செயலர்கள் வரும் 1ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். செயலர்களின் தூய்மைப்பணி தொகுப்பை பிரதமரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், அக்.2ல் சிறப்பாக செயல்பட்டோ ருக்கு விருது தர உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

'தூய்மை இந்தியா' திட்டத்தை, மக்கள் அதிகளவில் பங்கேற்கும் இயக்கமாக மாற்றி, குப்பைகளை தரம் பிரிப்பது, உரமாக மாற்றுவது மற்றும் சிறந்த அடிப்படை வசதிகளை உருவாக்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமரின் எதிர்பார்ப்பு குறித்து தெரிவிப்பதற்காக அரசு செயலர்களின் கூட்டம் நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், 'தூய்மை இந்தியா' திட்டத்தை செயல்படுத்த வரும் அக்டோபர் 2ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து தெரிவிக்க ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.

குறிப்பாக திறந்த வெளியில் கழிப்பிடம் இல்லாததற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, தூய்மை கிராமம், கழிவுநீர் வாய்க்காலை தூய்மைப் படுத்துவது, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கோயில்கள் மற்றும் பிற பொது இடங்களை தூய்மைப்படுத்த எடுக்கப்பட்ட பணிகள் என்னென்ன என்பது குறித்து செயலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

இதை வரும் 1ம் தேதி தெரிவிக்க வேண்டும். சிறந்த முறையில் செயல்பட்டவர்கள் அக்டோபர் 2ம் தேதி ராஜ்நிவாஸில் கவுரவிக்கப்படுவர். மேலும் புதுச்சேரி செயலர்களின் தூய்மைப் பணி தொகுப்பு பிரதமரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஆளுநர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close