அடேயப்பா, அடுத்த ஆண்டு பொதுவிடுமுறை இத்தனை நாட்களா?


தமிழ்நாடு அரசு

வரும் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆங்கில புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதம் மட்டுமே ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம், குடியரசு தினம் என மொத்தம் 6 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024ல் 24 பொது விடுமுறை தினங்கள்

இதே போல் ஏப்ரல் மாதத்திலும் ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மகாவீரர் ஜெயந்தி என 5 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக பிற 24 நாட்கள், பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை நாட்கள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு

இவை தவிர, அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். உதாரணமாக, ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x