[X] Close

ராணுவமரியாதை யார் கொடுப்பாங்கன்னு கூட கடம்பூர் ராஜூவுக்கு தெரியலியே..! - துரைமுருகன் கிண்டல்


duraimurugan-kadambur-raju

திமுக பொருளாளர் துரைமுருகன்

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Sep, 2018 13:12 pm
  • அ+ அ-

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்ததும் அரசுமரியாதை செய்ததும் அதிமுக அரசு போட்ட பிச்சை என்று கடம்பூர் ராஜூ பேசியிருந்தார். இதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் ‘நீங்க எங்கே கொடுத்தீங்க? நீதிமன்றத்தை அணுகித்தானே மெரினாவில் இடம்பெற்றோம்’ என்றார். ராணுவ மரியாதையை மத்திய அரசுதான் கொடுத்தது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது ராணுவம். அதுகூட அமைச்சருக்குத் தெரியலை’ என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

அமைச்சர் கடம்பூர் ராஜூ, எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசமுடியுமோ அப்படிப் பேசியிருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நீங்கள் எங்கே இடம் கொடுத்தீர்கள்? தரமாட்டோம் என்று தவிக்கவீட்டது இந்த அதிமுக அரசு. பிறகு நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுத்தானே இடத்தைப் பெற்றோம்?

நாங்கள் அப்பீலுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் போகவில்லை என்கிறார். இந்த நீதிபதியே என்ன சொன்னார்? மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அரசு பொறுப்பேற்குமா என்று கேட்டாரே!

அப்பீலுக்குப் போகவேண்டியதுதானே. அப்படிப் போயிருந்தால், அங்கே உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகளின் திட்டுகளை வாங்கியிருப்பார்கள்.

அடுத்து, ராஜாஜி ஹாலில் மரியாதை செலுத்த இடம் கொடுத்தோம். நான் கையெழுத்திட்டேன் என்கிறார் கடம்பூர் ராஜூ. மெரினாவில் அண்ணாவின் சமாதிக்கு அருகில் கலைஞருக்கு இடம் வாங்குவதற்கு, சட்டத்தைப் போராடிப் பெறத் தெரிந்த எங்களுக்கு, ராஜாஜி ஹாலில் இடம் கேட்டுப் போராடுவது என்ன பெரியவிஷயமா?

இதையடுத்து கடம்பூர் ராஜூ சொன்னதுதான் முக்கியம். கலைஞர் உடலுக்கு ராணுவ மரியாதை தந்தோம் என்றார். ராணுவ மரியாதையை மத்திய அரசுதான் வழங்கும். மத்திய அரசுதான் வழங்கியது. ராணுவ மரியாதை எந்த அரசாங்கத்துக்கு உட்பட்டு இருக்கிறது என்பது ஒரு அமைச்சருக்குத் தெரியவில்லை. தகுதியில்லாமல், கீழ்த்தரமாக, கலைஞரை அவன் இவன் என்று பேசுகிறார்.

இவ்வாறு துரைமுருகன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close