[X] Close

கஞ்சா பழக்கத்துக்கு சிறார்கள் ஆளாகும் அபாயம்: தம்பதி மீது திருப்பூர் மக்கள் குற்றச்சாட்டு


students-addicted-for-kanja

திருப்பூர் குமாரசாமி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி வீட்டுக்கு பொதுமக்கள் போட்ட பூட்டு.

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 09:42 am
  • அ+ அ-

திருப்பூரில் கஞ்சா போதைப் பழக்க த்துக்கு சிறார்கள் பலர் ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 30-வது வார்டு குமாரசாமி நகர் பகுதியில் வசிக்கும் சுப்புலட்சுமி, பாபு (எ) ஈஸ்வரன் தம்பதி, தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை யடுத்து, அங்கிருந்து தம்பதி தப் பினர். இதுதொடர்பாக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அந்த தம்பதி வீட்டுக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர்.

குழந்தைகள் மூலம் விற்பனை

இதுதொடர்பாக அப்பகுதி மக் கள் கூறியதாவது: எங்கள் பகுதி யில் பல ஆண்டுகளாக மேற்கண்ட தம்பதி கஞ்சா விற்பனையில் ஈடு பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். முன்னர், கேத்தம்பாளையத்தில் வாழ்ந்து வந்தனர். அங்கும் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்டதால், இடம்பெயர்ந்து எங்கள் பகுதிக்கு வந்தனர். கஞ்சாவை வாங்கி உட்கொள்ள, நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால், 10 அடி அகலம் உள்ள எங்கள் தெருவில் பெண்கள், குழந்தைகள் வெளியே நடமாட முடியாத நிலைக்கு ஆளாகின்றனர்.

மேற்கண்ட தம்பதியின் குழந் தைகளும் பள்ளிக்கு செல்லாமல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்ற னர். சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியின் குழந்தை கஞ்சா விற் கும்போது ஏற்பட்ட பிரச்சினையில், அமில வீச்சில் சிக்கி முகத்தின் ஒருபக்கம் சிதைந்துள்ளது.

தற்போது எங்கள் பகுதியிலுள்ள சிறார்களும் போதைப் பழக்கத் துக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எதிர்த்தால் மிரட்டல்

முன்னாள் கவுன்சிலர் எம்.சபரீஸ் வரன் கூறும்போது, ‘பொதுமக்கள் தெருவில் நடமாடவே முடியாத நிலை உருவானதால், வீதிக்கு வந்து போராடும் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டனர். குடியிருப்பு நிறைந்த குறு கலான தெரு என்றும் பாராமல், கஞ்சா வாங்க வருவோர் தெருக் களில் அப்படியே வாகனங்களை வீடுகள் முன்பு நிறுத்துவதும், தகராறில் ஈடுபடுவதும் சமீபகால மாக அதிகரித்து வந்தது.

சமீபத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டியதால், கத்தி யைக் காட்டி அவரை மிரட்டிய சம்ப வங்களும் நிகழ்ந்துள்ளன. அவ் வப்போது, அனுப்பர்பாளையம் போலீஸார் நடவடிக்கை எடுப்பர். இருப்பினும், சில நாட்களில் வியாபாரத்தை தொடங்கிவிடுவர்.

தற்போது, நாள் சம்பளத்துக்கு ஆட்களை நியமித்து, பள்ளிகள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதி களில் கஞ்சா விற்பனையில் தம்பதி ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநகரில் சிறார்கள் பலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் நிலை உள்ளது' என்றார்.

போதைத் தடுப்புக் குழு

மேலும் சிலர் கூறும்போது, ‘கேரளாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் ஆண்டுக் கணக்கில் தண்டனை வழங்குவதுபோல், தமிழகத்திலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற மோசமான குற்றங்கள் குறையும். கஞ்சா விற்பனை தொடர்பாக, தம்பதி மீது சுமார் 25 வழக்குகள் உள்ளன. ஆனால், இந்த தம்பதி மீது இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸாரும் இவர்களுக்கு துணை போகிறார்களா என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.

தற்போதைய நிலையில், எங்கள் பகுதியின் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில் 100 பேர் கொண்ட போதை தடுப்புக் குழு ஏற்படுத்தி, இரவு நேரங்களில் 30 - 35 பேர் வரை கண்காணிப்புப் பணி யில் ஈடுபட உள்ளோம்' என்றனர்.

விசாரித்து நடவடிக்கை

திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் இ.எஸ்.உமா ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘தம்பதி குடியிருப்பது சொந்த வீடு. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால், அதனை தடுக்கும் பணியை போலீஸார் செய்வார்கள். அவர்கள் மேல் உள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் முறையாக எதிர்கொண்டு, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை காலி செய்ய சொல்ல முடியாது. தம்பதியின் சிறார்கள் மூலமாக, பள்ளிகளில் சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close