எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைவில் முடிக்கவேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!


குற்றப் பின்னணி கொண்ட எம்.பி,எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி பாஜக வழக்கறிஞர் அஷ்வினி உபதயாயா உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

தற்போது குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் நிலை உள்ளது. அந்தத் தடையை ஆயுள் முழுவதும் நீட்டிக்குமாறும், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கு போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்

இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.பி, எம்எல்ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்குகளை திறம்பட நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வழக்கு சரியாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை உயர் நீதிமன்றங்கள் எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

x