ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும்- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


திமுக அரசு அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

வழக்கில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், இந்த சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்குகளில், மனுதாரர்கள் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தனர். அதில், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என்றும் அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது செல்லும் என்றும் அதேவேளையில் திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி போக்கர் விளையாட்டுக்கான தடை பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் ரவி பல மாதங்கள் கிடப்பில் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

x