கர்நாடகா துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரின் வீட்டிற்கு நேரில் சென்று பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா சந்தித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் கர்நாடகா பாஜக எம்.பியான தேஜஸ்வி சூர்யா, துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
என்ன காரணத்திற்காக , துணைமுதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரை சந்திருப்பார் என்ற கேள்வி இருகட்சியினரிடம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது எக்ஸ் பக்கத்தில், " பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா இன்று என்னை உள்துறை அலுவலகத்தில் சந்தித்து பல பிரச்சினைகளை விவாதித்தார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பு கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.