[X] Close

அழகிரியையும் அதிமுகவையும் சமாளிக்கமுடியலை! - ஸ்டாலின் குறித்து செல்லூர் ராஜூ பேச்சு


stalin-azhagiri

அமைச்சர் செல்லூர் ராஜூ - ஸ்டாலின

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Sep, 2018 12:00 pm
  • அ+ அ-

திமுக தலைவர் ஸ்டாலினால், அழகிரியையும் சமாளிக்கமுடியவில்லை. அதிமுகவையும் சமாளிக்கமுடியவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் இந்த அரசு, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மதுரையில் ரிங்ரோடு முதலான திட்டங்களைக் கொண்டு வர இருக்கிறோம்.

இதேபோல் இன்னும் ஏராளமான திட்டங்களைக் கொண்டுவர இருக்கிறோம். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், இந்த ஆட்சியை ராஜினாமா செய்யச் சொல்லுகிறார். மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுக ஆட்சியைக் கவிழ்த்தே தீருவேன் எனப் போராடி வருகிறார்.  இது நீதியா? நேர்மையா? ஸ்டாலின் தான் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும்.

ஸ்டாலினால், அழகிரியையும் சமாளிக்கமுடியவில்லை. அதிமுகவையும் சமாளிக்கமுடியவில்லை.

இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close