[X] Close

கூடுதல் விலைக்கு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


court-fined-petrol-bunk-for-price-hike

  • kamadenu
  • Posted: 17 Sep, 2018 09:13 am
  • அ+ அ-

நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து வாடிக்கையாளருக்கு பெட்ரோலை விற்பனை செய்த நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த எஸ்.சக்திகணபதி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை திருச்சி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கடந்த 2012-ம் ஜூன் 29-ம் தேதி ரூ.100-க்கு பெட்ரோல் வாங்கினேன். அன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.72.30 ஆகும். ஆனால், எனக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.75.27 என்று அளித்தனர். இதனால், 100 ரூபாய்க்கு 1.39 லிட்டர் பெட்ரோலுக்கு பதில் 1.33 லிட்டர் பெட்ரோல் மட்டுமே எனக்கு கிடைத்தது.

எனவே, என்னிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி அளிக்கவும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.75 ஆயிரம் வழங்கவும் பெட்ரோல் நிலையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் ஏ.பி.பாலச்சந்திரன், உறுப்பினர்கள் சி.அமுதம், ஆர்.டி.பிரபாகர் ஆகியோர், “மனுதாரர் பெட்ரோல் வாங்கியதற்கு முந்தைய நாள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.13 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், மனுதாரரிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே, கூடுதலாக பெறப்பட்ட தொகையை பெட்ரோல் நிலையம் மனுதாரருக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். வழக்குச் செலவாக ரூ.2,500-யும் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close