நீட் விலக்கே நம் இலக்கு: வைகோவை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!


மதிமுக அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

’நீட் விலக்கு - நம் இலக்கு’ எனும் கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு முழுமையாக விலக்கு பெற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, திமுக இளைஞரணி சார்பில் ’நீட் விலக்கு, நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும், திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து கையெழுத்து பெற்று வருகிறார்.

வைகோ, துரை வைகோ நீட் விலக்கு கையெழுத்து

இதன் ஒரு பகுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இன்று நேரில் சந்தித்து நீட் தேர்வு விலக்கு கோரிக்கை கையெழுத்தை பெற்றார். இதைத் தொடர்ந்து மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்திற்குச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம் குறித்து விளக்கி கூறினார்.

மதிமுக அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் நீட் விலக்கிற்காக கையெழுத்திட்டனர். அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x