[X] Close
 

சென்னை, வேலூர், காஞ்சிபுரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்


chennai-got-good-mid-night-rains-and-trend-will-continue

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Sep, 2018 16:20 pm
  • அ+ அ-

சென்னை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துக் கூறியிருக்கிறார்.

வானிலை ஆர்வலரும் பதிவருமான பிரதீப் ஜான் இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "செப்டம்பர் மாதத்துக்கான மழை நாட்கள் தமிழகத்தில் தொடரும். நேற்றிரவு சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இன்றும் இதேநிலை தொடரும். 

நான் ஏற்கெனவே கூறியது போல் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாக வாய்ப்பிருக்கிறது. காற்று சாதகமாக வீசினால் இது உருவாகும். 

சென்னையின் பரப்பளவு 426 சதுர கிலோமீட்டர். மேலும், இப்போது பெய்துவரும் மழையும் புயலால் ஏற்பட்டதோ அல்லது வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டதோ அல்ல. நாமும் கடவுள் இல்லை. எனவே எந்தப் பகுதியில் எந்தத் தெருவில் எந்த வீட்டின் மீது மழை பெய்யும் என்றெல்லாம் துல்லியமாகக் கூற முடியாது.

மழைக்கான சாதக நிலையை மட்டுமே கணித்துக் கூற முடியும். அதன்படி, அடுத்த சில நாட்கள் கடலோர பகுதிகளிலும் உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது" என்றார்.

அதேபோல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கூடலூர், பாண்டி ஆகிய பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையிலும் இன்றிரவு மழைக்கு வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.

[X] Close