இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தை கனமழை முற்றுகையிட்டு பெய்ய இருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் பெற்றுள்ளது. நவ.5 தொடங்கி நவ.7 வரையிலான 3 தினங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்டவற்றின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை காத்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தளவில், கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் இன்று பெய்யக்கூடு. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, வேலூர், விருதுநகர், கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை பரவலாக கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் பில்லூர் அணை பகுதியில் அதிகபட்சமாக 13 செமீ மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக ராமநாதபுரம் கமுதியில் 12 செமீ மழை பெய்துள்ளது.