[X] Close

என்னை மரியாதை நிமித்தமாகவே அழகிரி சந்தித்தார்: செல்லூர் ராஜூ


alagiri-meets-sellur-raju

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Sep, 2018 09:49 am
  • அ+ அ-

அழகிரி தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமாகவே என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், அதிமுக கட்சியில் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு. இவரது தாயார் ஒச்சம்மாள் தனது 95 வயதில் கடந்த 30ஆம் தேதி காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அழகிரி நேற்று செல்லூர் ராஜூ வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து வெளியே வந்த அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அழகிரி, "அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்க வந்தேன் அவ்வளவுதான். நீங்கள் எதிர்பார்த்தது போன்று வேறு ஒன்றும் இல்லை" என்று கூறிச் சென்றார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பல்வேறு ஊகங்களும் கிளம்ப மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலாசனைக் கூட்டத்துக்கு பின் பேசிய செல்லூர் ராஜூ, "தமிழர் கலாச்சாரத்தின் அடிப்படையில் எல்லா கட்சிக்காரர்களும் எனது தாயாரின் மறைவுக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அந்த வகையிலேயே மதுரையில் நான் ஒரு அதிமுக தொண்டன, எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பவன் என்பதற்காகவே அழகிரியும் வந்தார். வேற தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை" எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close