[X] Close

அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.க அனுமதிக்காது!- கட்சிக்காரரை சஸ்பெண்ட் செய்து ஸ்டாலின் எச்சரிக்கை


stalin-suspends-member

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Sep, 2018 20:47 pm
  • அ+ அ-

அழகுநிலையத்தை பெண்ணை தாக்கிய திமுக நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 

தனிப்பட்ட பிரச்சினைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது!

தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?
பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் சத்யா(40). இவர் பெரம்பலூர் என்.எஸ்.பி. ரோடு மற்றும் வெங்கடேசபுரம் ஸ்டேட் வங்கி எதிரிலும் பியூட்டி பார்லர் வைத்து நடத்திவருகிறார். இவருக்கும் இவரது நண்பர் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார்(44) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் நிலவிவந்த நிலையில் கடந்த மாதம் 17-ம்தேதி சத்தியாவின் வெங்கடேசபுரம் பியூட்டி பார்லருக்கு சென்ற செல்வகுமார் அவரை பணம் கேட்டு தாக்கியுள்ளார். 

சத்யா தாக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் இன்று சமுக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து செல்வகுமாரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

இந்நிலையில், அழகுநிலையத்தை பெண்ணை தாக்கிய திமுக நபரை சஸ்பெண்ட் செய்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் பிரியாணி கடையில் தகராறு செய்ததாக திமுக பிரமுகர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close