[X] Close

தோசை தரலைன்னா ரணகளம்தான்!- வைரல் குழந்தை குறித்து அன்னை பெருமிதம்


smithika-viral-baby

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Sep, 2018 18:48 pm
  • அ+ அ-

ஸ்மித்திக்காவை மறந்திருக்க வாய்ப்பில்லை. அதான், அம்மாவுக்கு புத்தி சொன்னாளே அந்த சுட்டிக் குழந்தைதான். திட்டாம குணமா வாய்ல சொல்லனும் என்று அண்ணைக்கு அறிவுரை சொன்ன குழந்தையின் தாய் பிரவீணா மகள் குறித்து பல்வேறு தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

அதில், "என் மகள் ஸ்மித்திக்கா சுட்டிப் பெண். ரொம்ப முதிர்ச்சியோடு பேசுவா. ஆனா ரொம்ப உணர்சிவசப்பட்டு சீக்கிரம் அழுதிடுவா. அன்றைய தினம் ஸ்கூலுக்கு கொண்டு சென்ற ஸ்நாக்ஸை திரும்பிக் கொண்டு வந்திருந்தாள் அதுக்கு லேசா தட்டினேன். அதனால்தான் அழுதாள். சும்மா கையில்தான் தட்டினேன். 

எங்க ஊரு திருப்பூர் ஊத்துக்குளி அருகில் உள்ளது. ஸ்மித்திகாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். நான் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறேன். பள்ளியிலும் ஸ்மிதிக்கா சுட்டிதான். மிஸ்ஸையே ஆன்டின்னுதான் கூப்பிடுவா. யுகேஜி படிக்கிறா. நிறைய பேசுவா. அவளோட நிறைய பேச எனக்குத்தான் நேரமில்லை. என் தோழி ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததாலேயே ஸ்மிதிக்கா ஃபேமஸ் ஆயிட்டா.

ஸ்மிதிகாவுக்கு தோசைன்னா அவ்ளோ இஷ்டம். கேட்டவுடன் தோசை தரலைன்னா ரணகளம்தான்" என்று கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close