[X] Close

ஓரினச்சேர்க்கை விவகாரம்; காட்டுமிராண்டித்தனமானது!  - துரைமுருகன் தாக்கு


duraimurugan

துரைமுருகன்

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 19:25 pm
  • அ+ அ-

ஓரினச் சேர்க்கை விஷயத்தை சட்டமே ஏற்றுக்கொண்டிருப்பது காட்டுமிராண்டித்தனமானது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன், தென்காசியில் நடந்த விழா ஒன்றில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஒரு ஆண், பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார். அதேபோல், ஒரு பெண், ஆணைத் திருமணம் செய்துகொள்வார். இதுதான் நடைமுறை.

ஆனால், இப்போது என்னவெல்லாமோ நடக்கிறது. ஒரு ஆண், இன்னொரு ஆணைக் கல்யாணம் செய்துகொள்கிறார். அதேபோல ஒரு பெண், இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்கிறார். இதை ஓரினச் சேர்க்கை என்கிறார்கள். இந்தச் சேர்க்கையை சட்டமும் ஒப்புக்கொண்டு ஆதரிக்கிறது. இது காட்டுமிராண்டித்தனமானது.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close