[X] Close
 

ஏன் தண்ணியில ஓட்டலாமே!- கட்கரியை ஓட்டிய ராமதாஸ்


nitin-gadkari-says-fuel-from-ethanol-plants-will-bring-down-diesel-price-to-rs-50-per-litre

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 12:32 pm
  • அ+ அ-

பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால், மெத்தனாலை பரிந்துரைத்துப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்வீட் மூலம் கிண்டல் செய்திருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேசிய அரசியலில் மட்டுமல்ல உள்ளூர் அரசியலிலும் வியாபித்திருக்கிறது. நாளுக்கு நாள் எதிர்ப்புக் குரல் அதிகரிக்க சமாளிக்கிறேன் என்ற பெயரில் பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் கிண்டல், கேலிகளுக்கே வலி வகுக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என மத்திய அரசு கைவிரித்துவிட்டாலும்கூட யோசனைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் கூறி வருகின்றனர் பாஜகவினர்.
அந்த வரிசையில் அண்மையில் சத்தீஸ்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, "நாம் பெட்ரோல் மற்றும் டீசலை ரூ. 8 லட்சம் கோடிக்கு  இறக்குமதி செய்கிறோம். விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது.

விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களால் நாட்டில் எத்தனால், மெத்தனால் மற்றும் பயோ எரிபொருளை உருவாக்க முடியும் என்று நான் 15 ஆண்டுகளாக கூறி வருகின்றேன்.

பயோ எரிபொருளைப் பயன்படுத்தி முதன்முதலாக நாம் விமானத்தை இயக்கியுள்ளோம். டேராடூன் - டெல்லி இடையே இந்த விமானம் ஓடியுள்ளது. இதுபோன்று பஸ், ஆட்டோ, வாடகை கார், போன்றவற்றுக்கு எத்தனால், பயோ எரிபொருள் கட்டாயம் ஆக்கப்படும். எத்தனால், மெத்தனால் பயன்பாட்டுக்கு மாறினால் பெட்ரோலை சார்ந்திருப்பது குறையும். பெட்ரோல் விலையும் குறையும்" எனப்பேசியிருந்தார்.

இந்நிலையில் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "எத்தனால் கலந்த எரிபொருள் விற்பனைக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி - இதற்கு தண்ணீரில் ஓடும் வாகனங்கள் வந்தால் பெட்ரோல், டீசலே தேவைப்படாது என்று கூறியிருக்கலாம்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

[X] Close