[X] Close

தம்பிதுரை பொய் சொல்கிறார் ; எச்.ராஜா தாக்கு


petrol-prise-hraja

எச்.ராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 11:05 am
  • அ+ அ-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விஷயத்தில், மத்திய அரசு மீது பழிபோட்டு பேசி வருகிறார் தம்பிதுரை. விலை உயர்வு விஷயத்தில் தம்பிதுரை பொய் சொல்கிறார் என்று பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, முன்னெப்போதும் இல்லாத வகையில் எகிறிக்கொண்டே போகிறது. இன்னும் சில நாட்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்றாகிவிடும் என பொதுமக்கள் கலக்கத்துடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், கடந்த 10ம் தேதி இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து பாரத் பந்த் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவது முள்ள பல கட்சிகள் ஆதரித்தன. தமிழகத்தில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் முதலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.தமிழகத்தில் நடந்த போராட்டக் கூட்டங்களிலும் கலந்துகொண்டன.

இதனிடையே, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது. இதேபோல், தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை குறையுமா எனும் எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். அவர்கள்தான் விலையைக் குறைக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

மத்திய அரசின் கலால் வரி 23 சதவிகிதம். அதில் மாநில அரசுக்கு 14 சதவிகிதம் தந்துவிடுகிறோம். ஆனால் அதற்கு மேலே 56 சதவிகிதம் வரி போட்டிருப்பது தமிழக அரசுதான். அதிக வரியைப் போட்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது மாநில அரசுதான்.

ஆகவே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணம் மாநில அரசுதான். எனவே தம்பிதுரை போன்றவர்கள் பொய் சொல்லுகிறார்கள். பொய் பரப்பாமல் இருங்கள்.

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close