[X] Close
 

மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அரசுப் பேருந்தை சாலையோரம் நிறுத்தி உயிரிழந்த ஓட்டுநர்


amazing-work-by-government-bus-driver

  • kamadenu
  • Posted: 12 Sep, 2018 10:25 am
  • அ+ அ-

சேலத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், 45 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அடுத்த தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண சுந்தர ஆனந்தம் (38). இவர் விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்து கழகத் தில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்தார். இவர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத் தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். உடன் நடத்துநர் அய்யனார் பணியில் இருந்தார். 45 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.

சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே பேருந்து சென்றபோது, ஓட்டுநர் கிருஷ்ண சுந்தர ஆனந்தத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்திய அவர் அதேநேரம் இருக்கையில் இருந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பயணிகள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நடத்துநர் அய்யனார் அழைத்து சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் அம்மாபேட்டை போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close