பீகாரில் பெண் போலீஸ்காரரை பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள சஹர்சாவைச் சேர்ந்தவர் சுன்னா முகியா. இவர் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ) கட்சி தலைவராக உள்ளார்.நேற்று வாகனச் சோதனையின் போது சிலர் போலீஸாரைத் தாக்கி விட்டு தப்பினர். அவர்களில் சிலர் முகியா வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்களைத் தேடி போலீஸார் முகியா வீட்டிற்குச் சென்றனர். அப்போது முகியா மற்றும் அவரது ஆதரவாளர்கள், போலீஸாரைத் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர். இதை ஒரு பெண் போலீஸ்காரர் வீடியோ எடுத்தார்.
அப்போது பெட்ரோல் பல்கில் இருந்து வாளியில் பெட்ரோலை பிடித்து வந்து பெண் போலீஸ்காரர் ஒருவர் மீது ஊற்றினர். தனது மனைவியிடம் தீப்பெட்டியை எடுத்து வருமாறு சுன்னா முகியா கூறினார். ஆனால், அதனையும் மீறி போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!