விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய கல்லூரி மாணவர்; சட்டெனெ கனிமொழி செய்த நெகிழ்ச்சி செயல்!


விபத்தில் சிக்கியவருக்கு உதவிய கனிமொழி எம்.பி.,

கோவை அருகே சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்வுகளில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பங்கேற்றார். அவர் இன்று பிற்பகல் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக திருப்பூர் புறப்பட்டுச் சென்றார். அப்பொழுது கணியூர் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் காயத்துடன் மயங்கிய நிலையில் இருப்பதை அவர் பார்த்தார்.

கோவை சேலம் நெடுஞ்சாலையில் பைக் மீது லாரி மோதி விபத்து

உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கிய கனிமொழி, காயமடைந்த மாணவரை கட்சிக்காரர்களின் காரில் ஏற்றி அருகில் இருந்த பிரேமா என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் மாணவரை அனுமதித்த கனிமொழி, மருத்துவரிடம் உடல் நிலையை கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படி கூறிவிட்டு, பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

விபத்தில் படுகாயமடைந்த ராபின்

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், காயமடைந்த மாணவர், டாக்டர் நாச்சிமுத்து கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் என்பதும், அவரது பெயர் ராபின் என்பதும் தெரியவந்தது.

இவர் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து காத்திருந்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த கனிமொழி எம்.பி., உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தது தெரியவந்தது. கனிமொழியின் இந்த செயல், அப்பகுதியில் இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x