[X] Close

நளினி - பிரியங்கா ரகசிய சமரச ஒப்பந்தம் என்ன?- ட்விட்டரில் தமிழிசை தாக்கு


tamilisai-on-rajiv-convicts

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Sep, 2018 11:41 am
  • அ+ அ-

10 ஆண்டுக்கும் முன்னர் வேலூர் சிறையில் நளினியை ரகசியமாக பிரியங்கா சந்தித்து செய்த சமரச ஒப்பந்தம் என்ன? என ட்விட்டரில் காங்கிரஸ் கட்சியினருக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

எழுவர் விடுதலை விவகாரத்தில் அதிமுகவும் பாஜகவும் கைகோத்து செயல்படுவதாக தொடர்ந்து காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சூரஜ்வாலா வெளியிட்ட ட்வீட்டை சுட்டிக்காட்டி பாஜக ஆதரவாளர் நாராயணன் திருப்பதி, "தீவிரவாதிகளை. விடுவிக்க அதிமுக - பா ஜ க நினைக்கிறது : ரந்தீப் சுர்ஜிவாலா,காங்கிரஸ்.
தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதே காங்கிரஸ் தலைவர் ராகுல் தானே?" என ஒரு ட்வீட் செய்திருந்தார்.

இந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி தமிழிசை, "10 ஆண்டுக்கும் முன்னர் வேலூர் சிறையில் நளினியை ரகசியமாக பிரியங்கா சந்தித்து செய்த சமரச ஒப்பந்தம் என்ன?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close