[X] Close

அங்கு வீடு தேடி சேவை; இங்கு வீடு தேடி லஞ்சம்: தமிழக அரசை சாடும் ராமதாஸ்


ramdoss-slams-tn-government

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Sep, 2018 14:58 pm
  • அ+ அ-

திருமண சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், குடிநீர் இணைப்பு உட்பட, 40 விதமான அரசு சேவைகளை, வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டம் டெல்லியில், இன்று முதல் அமலுக்கு வருகிறது.

உலகிலேயே முதல் முறையாக, இப்படியொரு திட்டம், அமலுக்கு வருகிறது. என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதை சுட்டிக்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசைக் கிண்டல் செய்து ஒரு ட்வீட் வெளியிட்டிருக்கிறார்.

அதில், "ஓட்டுனர் உரிமம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 சேவைகளை வீடு தேடி சென்று வழங்கும் திட்டம் தில்லியில் அறிமுகம்: செய்தி - இது தான் மக்கள் நல அரசு. தமிழகத்தில் வீடு தேடி சென்று லஞ்சம் வாங்கும் சேவை மட்டும் தான் நடைமுறையில் உள்ளது!" எனப் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் குட்கா ஊழல் புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது. அதேபோல் அமைச்சர் வேலுமணி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அரசு கான்ட்ராக்டுகளைப் பெற்றதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ராமாதாஸ் தமிழக அரசை வீடு தேடி சென்று லஞ்சம் வாங்கும் சேவை செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக நேற்று திருவள்ளூரில் பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ் "தமிழ்நாட்டில் 70 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது" என்று குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close