கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், வடக்கு மலபாரில், தில்லங்கேரியில் கடந்த புதன்கிழமை நடைப்பெற்ற பாரம்பரிய திருவிழாவில், தெய்யம் நடனத்தின் போது, நடன கலைஞரை பொதுமக்கள் தாக்கியது பரபரப்புக்குள்ளானது.
கேரள பாரம்பரிய உள்ளூர் திருவிழாவான கைதாச்சாமுண்டி தெய்யம் நிகழ்ச்சியின் போது அந்த பகுதியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் நடன கலைஞரின் ஆக்ரோஷமான நடனத்தைப் பார்த்து, அலறியடித்து ஓடியதில், கீழே விழுந்து காயமடைந்தான்.
தெய்யம் நடன கலைஞர், கோழியின் அடையாளமாக முகம் முழுவதும் இரத்தத்தால் அலங்கரிக்கப்பட்டு, ஆக்ரோஷமான நடிப்பையும், நடனத்தையும் காட்டியபோது, திரண்டிருந்த பார்வையாளர்கள் மத்தியில் இருந்த சிறுவனின் அருகில் ஆக்ரோஷமாக நடனமாடியபடியே சென்றதால், சிறுவன் பயத்தில் அலறியடித்து ஓடியதில் கீழே விழுந்து காயமடைந்தான்.
இதையடுத்து, தெய்யம் நடனத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களும், பொதுமக்களும் நடன கலைஞரை தாக்கினார்கள். பொதுமக்கள் நடன கலைஞரைத் தாக்குவதைக் கண்ட விழா அமைப்பாளர்கள் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களை சமாதானப்படுத்தி, அவர்களிடமிருந்து நடன கலைஞரைக் காப்பாற்றினார்கள். இந்த சம்பவம் திருவிழாவில் திடீர் பதற்றத்தை உருவாக்கியது.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!
அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!