[X] Close

கல்வியில் சிகரம் தொட்ட குஞ்சப்பனை பழங்குடியினர் பள்ளி: மூன்று மாணவர்கள் காமராஜர் விருதுகளை பெற்று சாதனை


great-work-by-poort-students

பள்ளி தலைமையாசிரியரிடம் விருதை காட்டி பாராட்டு பெற்ற ஆர்.ஜீவானந்தம்

  • kamadenu
  • Posted: 10 Sep, 2018 10:09 am
  • அ+ அ-

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டம் குஞ்சப்பனையில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவை புரிந்து வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் 3 பேர் காமராஜர் விருதுகளை பெற்று சாதித்துள்ளனர்.

கோத்தகிரி-மேட்டுபாளையம் எல்லையில் அமைந்துள்ளது குஞ்சப்பனை கிராமம். அடிப்படை வசதிகளுக்கே அல்லாடும் இக்கிரா மத்தில், பழங்குடியினர் மாணவர் கள் கல்வி பெற பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. குஞ்சப்பனையைச் சுற்றியுள்ள கோழிக்கரை, மாமரம், மேல் தட்டப்பள்ளம், கீழ் தட்டப் பள்ளம், மேல் கூப், கீழ் கூப், செம் மணாரை, கரிக்கையூர் மற்றும் சோலூர்மட்டம் ஆகிய பழங்குடி யினர் கிராம மாணவர்களுக்கு கல்வி சேவை செய்து வருவது குஞ்சப்பனை உண்டு உறைவிடப் பள்ளி. கடந்த 1953-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி 1996-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது இந்த பள்ளியில் 207 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆசிரியர்களின் முழு முயற்சி காரணமாக பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக 2015-16 கல்வியாண்டில் முதன்முறையாக பிளஸ் 2 தேர்வில் இந்த பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. 14 மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரு முறை இந்த பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இந்தாண்டும் தேர்ச்சியில் சதம் கண்டது இப்பள்ளி.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், பழங்குடியினர் பிரிவில் இப்பள்ளி மாணவன் எஸ்.மாரிமுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், மாணவர் என்.விஸ்வநாதன் மாநில அளவில் மூன்றாம் இடமும் பிடித்து சாதனைப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 3 மாணவர்களுக்கு காமராஜர் விருது கிடைத்திருப்பது பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

மாணவர்களின் வகுப்பாசியிரி யர் கஜேந்திரன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: குஞ்சப்பனை உண்டு உறைவிட பள்ளி பழங்குடியினர் மாணவர் களுக்கு கல்வி சேவை செய்து வருகிறது. பழங்குடியினர் பிரிவில் மாநில அளவில் மாணவர் எஸ்.மாரிமுத்து (1009) இரண்டாம் இடமும், விஸ்வநாதன் (1003) மூன்றாம் இடமும் பிடித்தனர்.

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2017-2018 கல்வி யாண்டில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்று கல்வியிலும், கல்வி இணைச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது ஆசிரியர் தினத்தன்று வழங்கப்பட் டது. இதில், பள்ளியின் 12-ம் வகுப்பு மணவர்கள் எஸ்.மாரிமுத்து, ஆர்.ஜீவானந்தம், மற்றும் 10-ம் வகுப்பு மாணவர் எஸ்.கோகுல்சஞ்சய் ஆகிய மூவருக்கு விருதுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார் என்றார்.

பள்ளித் தலைமையாசிரியர் என்.விணுதாஸிடம் பேசும் போது, ‘பழங்குடியினர் மாணவர்கள் பள்ளிக்கு வர தயங்குவர். பல்வேறு முயற்சிக்கு பின்னர் தற்போது 207 மாணவர்கள் பள்ளியில் சேர்ந் துள்ளனர். குஞ்சப்பனை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி கரிக்கை யூர் மற்றும் சோலூர்மட்டத்தி லிருந்து மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் இருளரினத்தை சேர்ந்தவர்கள். இந்தாண்டு 10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 12-ம் வகுப்பிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 3 மாணவர்களுக்கு காமராஜர் விருது கிடைத்திருப்பது பெருமை’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close