குட்நியூஸ்...1000 ரூபாயாக நிதி உதவி அதிகரிப்பு... புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு


முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கான நிதியுதவி ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலையாகி, இந்தியாவுடன் இணைந்த நவம்பர் 1-ம் தேதி அம்மாநிலத்தில் விடுதலை நாள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி, தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

அப்போது “குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் வகையில் புதுச்சேரியில் 23 தொகுதிகளில் ரூ.43 லட்சம் செலவில் குழந்தைகள் மகிழ் நூலகங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள சிரமத்தைப் போக்கும் வகையில் ’CanKids’ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கொடியேற்றி வைத்தார்

இதன் மூலம் புதுச்சேரியிலிருந்து பரிந்துரைக்கப்படும் குழந்தைகள், நாடு முழுவதும் உள்ள மற்ற மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான சிறந்த சிகிச்சையினைப் பெற முடியும்.

முதலமைச்சர் ரங்கசாமி கொடியேற்றுகிறார்

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களின்போது, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500, வரும் தீபாவளி முதல் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x