பரபரப்பு... நகராட்சி கூட்டத்தில் வீசப்பட்ட நாற்காலி... தூக்கி எறிந்த திமுக கவுன்சிலர்; பதறிய அதிமுகவினர்


நகராட்சி கூட்டத்தில் நாற்காலியை எடுத்து வீசிய திமுக கவுன்சிலர்

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில், குப்பைகள் அகற்றுவது தொடர்பான வாக்குவாதத்தின் போது, அதிமுக உறுப்பினர்கள் மீது நாற்காலியை தூக்கி வீசிய திமுக உறுப்பினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தேங்கியுள்ள குப்பைகளை அப்புறபடுத்தாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை நடத்த கூடாது, அதிகாரிகள் வந்த பின் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம்

ஆனால் நகராட்சி தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கூறியதால், இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. அதிமுக கவுன்சிலர்கள் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் 17வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் திடீரென அதிமுக பெண் கவுன்சிலர் விஜயலட்சுமி ஆகியோர் மீது கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கைகலப்பு

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்களும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி தலைவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றும் பிரச்சினை முடிவுக்கு வராததால் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்ட 11 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிவிட்டு கிளம்பி சென்றார். இதனால் அதிருப்தியடைந்த அதிமுக கவுன்சிலர்கள் 9 பேரும், திமுக கவுன்சிலர்கள் குண்டர்கள் போல நடந்துகொள்வதாக கூறி மன்ற கூட்டத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

அதிமுக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்

இதையும் வாசிக்கலாமே...

x