[X] Close

மாணவி சோபியாவை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது: ஸ்டாலின்


stalin-tweet-about-sophia-passport-issue

  • kamadenu
  • Posted: 07 Sep, 2018 18:58 pm
  • அ+ அ-

மாணவி சோபியாவை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 3-ம் தேதி சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் சோபியா. அதே விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும் வந்தார். அப்போது, சோபியா திடீ ரென ‘பாசிச பாஜக அரசு ஒழிக' என ஆவேசமாக முழக்கமிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழிசை அளித்த புகாரின் பேரில், சோபியாவை புதுக்கோட்டை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

பின்னர், தூத்துக்குடி 3-வது நீதித்துறை நடுவர்மன்றம் சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது. சோபியாவை போலீஸார் கைது செய்த போது, அவரிடம் இருந்த பழைய காலாவதியான பாஸ்போர்ட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர். எனவே, புதிய பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பித்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஸ்டாலின், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

#பாசிசபாஜகஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி "சம்மன் அனுப்பி" மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது!

மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும். மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close