சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞரும், மூத்த ஒளிபரப்பாளருமான மிர் முகமது ஃபாரூக் நஸ்கி நேற்று (பிப்ரவரி 6) கத்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் , சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 83.
அகில இந்திய வானொலி காஷ்மீர் மற்றும் தூர்தர்ஷனில் பல முக்கிய பதவிகளை வகித்த நஸ்கிக்கு, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி இரவு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். நஸ்கிக்கு திருமணமாகி, மனைவி இறந்த நிலையில், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகிய இருவரிடமும் ஊடக ஆலோசகராகவும் நஸ்கி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நஸ்கி, ஜம்முவில் உள்ள தனது மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
1995-ம் ஆண்டில், நஸ்கி தனது எழுதி வெளியிட்ட ‘நார் ஹுதுன் கன்சல் வனாஸ்’ (கண் இமைகளில் தீ) என்ற கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றிருந்தார்.
நஸ்கியின் உடல் இன்று (பிப்ரவரி 7) மல்கா கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நஸ்கியின் உடல், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!
பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!
கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!
அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!