உச்சத்தில் தங்கம் விலை; தொடர் உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!


தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு

தங்கத்தின் விலை கடந்து 2 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.160 வரை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களுக்கு முன்பு 5,858 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் தினம்தோறும் பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலை உயர்வு இருந்து வந்த நிலையில், அவ்வப்போது இருபது ரூபாய் வரை விலை குறைந்தும் வந்தது. இருப்பினும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே தங்கத்தின் விலை இருந்து வருகிறது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.160 உயர்வு

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.5,850 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.46,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வர துவங்கியிருப்பதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதாக வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ள்னர்.

அதே சமயம் வெள்ளியின் விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.76 க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x