கொளத்தூரில் கழிவுநீர் குழாய் இணைப்பு பணி: 2 நாட்கள் கழிவுநீர் சேவை பாதிக்கும்


சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் திரு.வி.க.நகர் மண்டலம், 200 அடி சாலையில் அமைந்துள்ள ரெட்டேரி சேவை சாலையில் (திருமலா மில்க்ஸ் அருகில்) கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி நாளை (ஆக.23) காலை 9 மணிமுதல் 24-ம் தேதி இரவு 9 மணிவரை (36 மணி நேரம்) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கொளத்தூர் உயர்மின் அழுத்த தொடர் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் சிவானந்தா கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது.

எனவே, கொளத்தூர் பகுதியில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதி பொறியாளரை 81449 30906 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

x