[X] Close

எக்காரணம் கொண்டும் சோபியா மீதான புகார் வாபஸ் இல்லை: தமிழிசை திட்டவட்டம்


tamilisai-firm-on-sophia-case

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Sep, 2018 10:29 am
  • அ+ அ-

விமானத்தில் கோஷமிட்ட மாணவி சோபியா மீதான புகாரை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்போவதில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன், ''சோபியா செய்தது சரி என்றால் இன்று எனக்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். இன்று வெறுமனே முழக்கமிடுபவர்கள் நாளை தாக்கவும் செய்வார்கள். இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதை தலைவர்கள் உணர வேண்டும். சோபியா நடந்து கொண்டது எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால்தான் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். விமானத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விதிமுறைகள் உள்ளது. சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். நான் சட்டத்தை மதிக்கிறேன். அதனால்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தேன். எக்காரணத்தை முன்னிட்டும் புகாரை திரும்பப் பெற மாட்டேன்'' என்றார்.

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணப்பட்டார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண், பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை அளித்த புகாரில் சோபியா கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால், எக்காரணம் கொண்டும் சோபியா மீதா புகார் வாபஸ் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close