ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் நீ...ண்ட நாட்களாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்திற்கான அப்டேட்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘ரிசீவ்ட் காப்பி - சேனாபதி’ என்று கையொப்பமிடப்பட்ட போஸ்டர் ஒன்றுடன் நாளை காலை 11 மணிக்கு என்ற அப்டேட்டை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து, கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசனின் 233, 234 படங்களைப் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கும் போது, ‘இந்தியன் 2’ படம் குறித்த அறிவிப்பும் வெளியாக இருப்பது கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில், படம் வெளியீட்டிற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.