சம்பய் சோரன் அரசு நீடிக்குமா? - ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!


சம்பாய் சோரன்.

ஜார்க்கண்டில் முதல்வர் சம்பய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்கிறது.

அரசு நிலங்களை அபகரித்ததாகவும் சட்டவிரோதமாக தனியாருக்கு விற்று ரூ.600 கோடி மோசடி செய்ததாகவும் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

சம்பாய் சோரனுக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சம்பய் சோரன் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றார். அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் 10 நாள் அவகாசம் அளித்தார்.

சம்பாய் சோரனிடம் ஆசி பெறும் ஹேமந்த் சோரன்

இதனால் சட்டப்பேரவையில் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. மெஜாரிட்டியை நிரூபிக்க 40 எம்எல்ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆளும் எம்எல்ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்க அவர்கள் ஹைதராபாத் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆளும் கூட்டணி அரசுக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசு வெற்றி பெறுமா என்பது நாளை தெரியும்.

x