இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் - இபிஎஸ் கண்டனம்!


எடப்பாடி பழனிச்சாமி - இபிஎஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ,சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல் நபராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘’இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் , சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். இந்த விடியா திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை , அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யுனிஸ்ட்கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.

நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது , தங்களது கூட்டணி கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து , கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

x