ஆக்கிரமிப்புகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் குடும்பங்கள்... உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!


சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு மறுகுடியமர்த்தப்படும் குடும்பத்தினரின் குழந்தைகளின் கல்வி குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் மறு குடியமர்வு தொடர்பான அரசின் கொள்கைகள், சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் கூவம் நதிக்கரையில் ஆக்கிரமித்து வசித்து வந்த14,257 குடும்பங்களில் 13,514 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மறுகுடியமர்த்தப்படும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டது. மேலும், அரசின் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

x