தமிழக முதல்வரின் தனிச் செயலாளர்கள் நியமனம் - வெளியானது புதிய அறிவிப்பு!


சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதல் தனி செயலராக உமாநாத் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் இரண்டாவது தனி செயலாளராக எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ், மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, தலைமை செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா, நேற்று முன்தினம் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டார். இவர் தமிழக முதல்வரின் முதன்மை தனிச் செயலாளராக இருந்தவர் ஆவார்.

இந்நிலையில் தற்போது தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து 2வது தனிச்செயலாளராக எம்.எஸ்.சண்முகமும் , 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னதாக தமிழக முதல்வரின் 2,3,4 வது தனிச் செயலாளர்களாக இருந்தனர். முன்னதாக முதல்வரின் இணைச் செயலாளராக ஜி.லட்சுமிபதி நேற்று நியமிக்கப்பட்டார்.

x