[X] Close

தீர்ப்பை நிறைவேற்ற போராடுவதுதான் வேதனை: ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு


senior-judge-chandru-speech-at-tirupur

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 04 Sep, 2018 14:33 pm
  • அ+ அ-

நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற போராடுவதுதான் வேதனையான செயல் என்று, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தெரிவித்தார்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்வு திருப்பூரில் நேற்று நடந்தது.

இதில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் யாசகம் கேட்க வில்லை, பிச்சையும் கேட்க வில்லை, பரிதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. மாறாக, சம உரிமை, சம வாய்ப்பைத்தான் கேட்கிறார்கள். அதனை மறுக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல்வேறு வழக்கு களை நீதிமன்றம் சந்தித்திருக்கிறது.

சட்டத் திருத்தம் தேவை

2 கால்களும் இல்லாத பெண்ணை, சங்கிலியால் கட்டி போட்டிருந்தார்கள். அந்த பெண் ஓடிவிடுவார் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். புகைப்படத்தை காட்டிய பின்னர், நீதிபதி கடுமையாக கண்டித்தார். நீதிமன்ற உத்தரவு வாங்கினால் மட்டும் போதாது, அதனை அமல்படுத்தவும் போராட வேண்டியுள்ளது.

ரயில்களில் ஏறுவதற்கு அனைத் துப் பெட்டிகளிலும் சாய்வுதளம் மற்றும் தனிக் கழிப்பறை வைப்ப தாக ரயில்வே அமைச்சகம் ஒப் புக்கொண்டது. ஆனால், இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அதேபோல, பேருந்து போக்குவரத் திலும் மாற்றுத்திறனாளிகள் ஏறுவ தற்கு உரிய வசதிகள் இல்லை.

போக்குவரத்து, மின்சாரத் துறை களில் பணியின்போது விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி ஆகிவிட் டால், அவர்களை வேலையை விட்டு நீக்கும் நிலை உள்ளது. மாறாக, அவர்கள் ஓய்வுபெறும்வரை சம்பந் தப்பட்ட துறைகளில் வேறு வேலை களில் ஈடுபடுத்த வேண்டும். பொதுத் துறையில் பணிபுரிவோரின் நிலை இது. தனியார் துறையில் பணிபுரிந்தால், இந்த சட்டம் பொருந்தாமல் உள்ளது. எனவே, சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும்.

இயக்கங்கள் தேவை

மனநலம் குன்றியவர்களும் மாற்றுத்திறனாளிகள்தான். பணிக்காலத்தில் ஒருவர் மனநலம் குன்றினால் மாற்றுத்திறனாளிதான். அவர்களை பணியைவிட்டு அனுப்ப முடியாது. சட்டம் எளிமையாக இல்லாமல் இருப்பது, இருக்கும் சட்டத்தை அமல்படுத்த நீதிமன்றம் செல்ல வேண்டி இருப்பது, நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல் படுத்துவது உள்ளிட்டவற்றுக்குப் போராட்டம் நடந்த வேண்டியுள்ளது. இதற்கு, இன்றைக்கு இயக்கங்கள் தேவைப்படுகின்றன. நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றப் போராடுவது தான் வேதனையான செயல். இவ் வாறு நீதிபதி கே.சந்துரு கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட் டில் காயமடைந்து மாற்றுத்திற னாளிகளான பரமசிவன் (43), ராமச்சந்திரன் (23), ராஜாசிங் (19), ஆனந்த கண்ணன்(35), தங்கம் (40) ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close