[X] Close

நானும் சொல்கிறேன் ’பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக’: மு.க.ஸ்டாலின் ஆவேச ட்வீட்


stalin-angry-tweet-about-sophia-arrest

  • kamadenu
  • Posted: 04 Sep, 2018 08:17 am
  • அ+ அ-

சோபியா கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “நானும் சொல்கிறேன் ’பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக” என்று ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார். 

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணப்பட்டார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண், பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை அளித்த புகாரில் சோபியா கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஜனநாயக விரோத, கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் இந்த ட்வீட் பதிவு பெரும் வைரலாகி வருகிறது. மேலும், ட்விட்டர் பக்கத்தில் #Sophia,  #சோபியா மற்றும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக ஆகிய ஹெஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

மேலும், ’என் மகளை அசிங்கமாக பேசி, கொலைமிரட்டல் விடுத்து உயிர்பயத்தை ஏற்படுத்திய தமிழிசை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் சோபியாவின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close