[X] Close

கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் விற்பனை பாதிக்கும்? - வடிவமைப்பாளர்கள் கவலை


new-rules-for-vinayagar-chaturthi

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவை தெலுங்குபாளையம் பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ள பல்வேறு வகை விநாயகர் சிலைகள் | படங்கள்: ஜெ.மனோகரன்

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 03 Sep, 2018 16:38 pm
  • அ+ அ-

விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி, கோவையில் பல்வேறு வகை விநாயகர் சிலைகள் உருவாக் கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், விற்பனை பாதிக்கப்படுமோ என சிலை வடிவமைப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13-ம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி, வீடுகளிலும், பொது இடங் களிலும் வைத்து வழிபடுவதற்காக 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. கோவை மாவட் டத்தில் பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை தெலுங்குபாளையம், சுண்டக்காமுத்தூர், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, கோவை மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக் கப்படுகின்றன. தெலுங்குபாளை யத்தில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சிலை வடிவமைத்து வருகிறார் சக்திவேல் முருகன்(54).

நீர் நிலைகளுக்கு பாதிப்பு இல்லாத...

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் அவர் கூறிய தாவது: ஆரம்பத்தில் சுமார் ஓர் அடி, முக்கால் அடி சிலைகள்தான் அதிகம் உருவாக்கப்படும். கடந்த 16 ஆண்டுகளாக பிரம்மாண்டமான சிலைகள் உருவாக்கப்படுகின்றன. தற்போது 12 அடி வரை சிலை களை உருவாக்குகிறோம். எளிதில் நீர்நிலைகளில் கரையும் காகிதக் கூழ், கிழங்குமாவு, ஓடைக்கல் மாவு ஆகியவற்றால் சிலைகளை செய்து, பினிஷிங், பெயின்டிங் செய்கிறோம். ரசாயனம் கலந்த செயற்கை வண்ணங்களைப் பயன் படுத்தாமல், நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாத வாட்டர் கலர் வண் ணங்களைப் பயன்படுத்துகிறோம்.

பாகுபலி விநாயகர்

நடப்பு ஆண்டு பறக்கும் சித்தி விநாயகர், நர்த்தன விநாயகர், ரதம் ஓட்டும் விநாயகர் உள்ளிட்ட சிலைகளை புதிதாக செய்துள் ளோம். மேலும், ஜல்லிக்கட்டு விநாயகர், சிவன்-பார்வதி சமேத விநாயகர், பாகுபலி விநாயகர், சிங்கம், ரிஷபம், மூஷிகம், மயில், அன்னம், புலி, யானை வாகனங் களில் வீற்றிருக்கும் விநாயகர், பஞ்சமுக விநாயகர், ஆஞ்சநேயரு டன் இணைந்த விநாயகர், கருடாழ் வாரால் தூக்கிச் செல்லப்படும் விநாயகர், விவசாய விநாயகர் என பல்வேறு வகை சிலைகளை செய்துள்ளோம்.

10 சதவீத விலை உயர்வு

சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை தயாரிக்கப்பட்டு, ரூ.50 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும். பெயின்ட் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 முதல் 10 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

இதன்மூலமாக குயவர்கள், சிலை வடிவமைப்பாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர்.

ஆண்டு முழுவதும் தயாரிப்பு

தமிழக அரசின் பூம்புகார் நிறுவனமும் சிலைகளை வாங்கி, கைவினைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது. சிலைகளைத் தயாரிக்கத் தேவையான களிமண் கிடைப்பதில் சிரமம் உள்ளதால், ஆண்டு முழுவதும் களிமண் கிடைக்கும்போதெல்லாம் சிலை களை உருவாக்கி வருகிறோம். விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி கொலு, கிறிஸ்துமஸ் விழாக்களுக் காகவும் சிலைகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு கேமரா

விற்பனைக்காக விநாயகர் சிலை கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு களில், மர்ம நபர்களால் சிலைகள் உடைக்கப்படுவது உள்ளிட்ட சம்ப வங்களைத் தவிர்க்கும் வகையில், கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து, மானிட்டர்கள் மூலமாக கண்காணித்து வருகின்றனர்.

புதிய நிபந்தனைகள்

வழக்கமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, சதுர்த்தி விழாவைக் கொண்டாட அந்தந்தப் பகுதி காவல் துறை யினரிடம் அனுமதி பெறுவார்கள். ஆனால், இந்த ஆண்டு பல புதிய நிபந்தனைகளை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. முழுவதும் களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும், உயரம் 10 அடிக்குள் இருக்க வேண்டும், சிலைகள் வைக்கப்படும் இடங்களில் தீப்பிடிக்காத பொருட் களால் கூரைகள் அமைக்க வேண்டும். வருவாய், தீயணைப்புத் துறையினரிடம் அனுமதி, தடையில்லா சான்றிதழ்கள் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகள் ஏற்புடையதாக இல்லை என்று பல்வேறு இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரி டமும் ஏராளமான மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய விதிகளால் நடப்பு ஆண்டு விநாயகர் சிலைகள் விற்பனையில் பாதிப்பு இருக்கலாம் என சிலை உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர். 10 அடிக்கும் அதிகமான உயரத்தில் செய்துவைக்கப்பட்டுள்ள சிலை களின் நிலை என்னவாகும் என தெரியவில்லை.

அதேபோல, ஏற்கெனவே ஆர்டர் கொடுத்தவர்கள், அந்த சிலைகளை வாங்கிச் செல்வார்களா எனவும் தெரியவில்லை. விற்பனையும் குறையும் எனக் கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close