மீண்டும் பரபரப்பு... மற்றொரு அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!


அமலாக்கத்துறை

மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். இவர் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ரேஷன் கார்டு வழங்குவதில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சட்ட விரோத பணபரிவர்த்தனை பிரிவின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள மல்லிக் வீட்டிற்கு இன்று அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மல்லிக் வீட்டில் இல்லை. பின்னர் அவர் வீட்டிற்கு வந்தபிறகு செல்போனை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்

மேலும், உணவுத்துறை அமைச்சராக மல்லிக் இருந்தபோது அவரது உதவியாளராக இருந்தவர் வீடு உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக மல்லிக்கிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

x