கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் 5 புதிய ஏடிஎம் மையங்கள்


சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமம் அளித்த அனுமதியின்படி தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய 2 வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

இதுதவிர, நடமாடும் ஏடிஎம் வாகன இயந்திரம் ஒன்றும் பேருந்து வளாகத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் வரும் 24-ம்தேதிக்குள்ளும், ஹிட்டாச்சி நிறுவனத்தின் ஏடிஎம் 25-ம் தேதிக்குள்ளும், ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் 29-ம் தேதிக்குள்ளும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அந்தந்த வங்கிகள் உறுதி அளித்துள்ளன.

எனவே இம்மாத இறுதிக்குள் புதிதாக 5 ஏடிஎம் மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது.