2,222 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு


டிஆர்பி தேர்வு அறிவிப்பு

2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்-394, ஆங்கிலம்-252, கணிதம்-233, இயற்பியல்-292, வேதியியல்-290, தாவரவியல்-131, விலங்கியல்-132, வரலாறு-391, புவியியல்-106 ஆகிய பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

டிஆர்பி தேர்வு அறிவிப்பு

மொத்தம் 2,222 பணியிடங்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஜனவரி 7ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

x