[X] Close

விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாரா தந்தை?!


vijayabhaskar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Sep, 2018 15:59 pm
  • அ+ அ-

அரசுப் பணி, பணி மாறுதல்கள் உத்தரவை பெற்றுத்தர சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாக அவரது தந்தை வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள வீடு என 40 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

விசாரணை முடிந்த நிலையில், சோதனைகளின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வருமான வரித் துறை விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், இழுப்பூரில் உள்ள அமைச்சர் வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அந்தப் பணம் லஞ்சப்பணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுப் பணி, பணியிட மாறுதல்கள் பெற்றுத்தர அமைச்சர் பலரிடம் லஞ்சம் வாங்கியதாக அவரது தந்தை சின்னதம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 

இந்த அறிக்கை தற்போது விஜயபாஸ்கருக்கு சிக்கலைக் கிளப்பியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close