அதிர்ச்சி… யூத அரசியல் செயற்பாட்டாளர் படுகொலை!


அமெரிக்காவில் அரசியல் செயற்பாட்டாளரும், யூத ஜெப ஆலயத்தின் பொறுப்பாளருமான சமந்தா வோல் (40) படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு வாரங்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர அரசியல் செயற்பாட்டாளரும், ஐசக் அக்ரீ டவுன் யூத ஜெப ஆலயத்தின் பொறுப்பாளருமான சமந்தா வோல் (40) கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டுக்கு வெளியே சடலம் மீட்கப்பட்டது. இவர், அமெரிக்க காங்கிரஸ் கட்சிக்காகவும், மிச்சிகன் அட்டர்னி ஜெனரல் டானா நெசெலின் பிரச்சாரத்திலும் பணியாற்றியிருக்கிறார். அண்மையில் யூத முதியவர் ஒருவர், 6 வயது இஸ்லாமிய சிறுவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது யூத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கொலையில் பல கேள்விகள் உள்ளதாக கூறியுள்ள போலீஸார், விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இறந்த பெண்ணின் உடலில் பல கத்திக் காயங்கள் இருக்கின்றன. குற்றம் நடந்த இடத்தில் இருந்து சேகரித்த தடயங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். எனவே விரைவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

x