சென்னை புழல் சிறையில் மீனாட்சி என்கிற காந்திமதி (50) கைதியாக தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், பெண் கைதி காந்திமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில், தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரை கட்டி போட்டுவிட்டு 12 சவரன் நகைகளையும், 45 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயபுரத்தில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை அடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமீன் கிடைத்தும், காந்திமதிக்கு உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர முன்வராததால், மன உளைச்சலில் இருந்து வந்த கைதி காந்திமதி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.