[X] Close

இப்போது புரிகிறதா அறநிலையத்துறை குறிக்கோள்!- எச்.ராஜா சாடல்


h-raja-on-idol-theft-case

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Aug, 2018 12:32 pm
  • அ+ அ-

சிலை கடத்தல் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற மத்திய அரசு மறுத்திருப்பது குறித்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜா ட்வீட் செய்திருக்கிறார்.

அதில், "ஒரு வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டுமானால் ஆவணங்கள் எஃப்ஐஆர் எதையும் அனுப்பாமல் அரசாணையை மட்டும் அனுப்பியுள்ளதால் தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. மத்திய அரசு. ஆக அறநிலையத்துறையின் நடவடிக்கை வழக்கை தாமதப்படுத்தும் குறிக்கோளுடன் செய்யப்பட்டது என்பது தெளிவு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தலைமைச் செயலருக்கு கடிதம்:
சிலை கடத்தல் குற்றங்களை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு வைத்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதோடு, இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதில், "சிலை கடத்தல் குற்றம் தொடர்பான வழக்குகளின் எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய ஆவணங்களை இணைத்து அனுப்பவில்லை. பரிந்துரைக் கடிதம் மட்டுமே இருக்கிறது. வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி பரிசீலிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அறநிலையத்துறையின் நடவடிக்கை வழக்கை தாமதப்படுத்தும் குறிக்கோளுடன் செய்யப்பட்டது என்று எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close