[X] Close

அவர்கள் துயரம் உங்களை துரத்தாதா?!- பிரகாஷ் ராஜ்


wont-it-haunt-n-hunt-you-down

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Aug, 2018 10:39 am
  • அ+ அ-

பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சிறு குறுந் தொழிலாளர்கள், சாமான்யர்களின் துயரங்கள் உங்களைத் துதரத்தாதா என மத்திய அரசுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

பணமதிப்பு நீக்கத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் 99.3 சதவீதம் அதாவது ரூ.15.41 லட்சம் கோடியில் ரூ.15.31 கோடி வங்கிக்குத் திரும்பிவந்துவிட்டது. ரூ.10,700 கோடி மட்டுமே வரவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இது நாடு முழுவதும் பரவலாக பலதரப்பிலிருந்தும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில், "பணம்.. பணம்.. பணம்..! டீமானிட்டைசேஷன் பூதமே உனது அன்பும் தயவும் உனது ஊழல் நண்பர்களைக் காப்பாற்றியிருக்கிறது. ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது. லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பை பறித்துள்ளது. சிறு குறுந்தொழிலாளர்களை வதைத்துள்ளது.

சாமான்யனுக்கு கொடுங்கனவாக நீண்டு கொண்டு இருக்கிறது. இதெல்லாம் உன்னைத் துரத்தாதா?!" எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close