அமைச்சரின் அடேங்கப்பா யோசனை... `குடிமகன்களை’ திருத்தினால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு!


டாஸ்மாக்

''புதிதாக மதுகுடிக்க வரும் இளைஞர்களை, மதுக்கடைக்காரர்கள் அழைத்து கவுன்சிலிங் கொடுத்து மாற்றினால், சம்பந்தப்பட்ட மதுக்கடைக்காரர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம்'' என வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘’டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று முதல்வர் கூறியிருக்கிறார். 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு படிப்படியாக மதுவிலக்கை நோக்கி அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்று அரசுக்கு எந்தவித விருப்பமும், எண்ணமும் இல்லை. அதேசமயம் திடீரென மூடிவிட முடியாது. ஏனெனில் பழக்கப்படுத்தி விட்டார்கள்.

மேலும் கடைக்கு மதுபானங்கள் வாங்க வருகிறார்கள் என்று விற்பனையாளர்களுக்கு தெரியும். அவர்கள் இளைஞர்களாக இருந்தால் அழைத்து பேசி கவுன்சிலிங் கொடுத்து அந்த பழக்கத்தில் இருந்து தடுக்க வேண்டும். இப்படி குடிப் பழக்கத்தில் இருந்து தடுக்க பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

டாஸ்மாக் ஊழியர்கள் வேண்டுமென்றே எந்தவித தவறுகளையும் செய்யவில்லை. அங்கிருக்கும் சூழ்நிலை அப்படி இருக்கிறது. எனவே அந்த சூழ்நிலையை சரிசெய்து விட்டால் ஊழியர்கள் சரியான முறையில் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இதுதவிர பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக 40 புகார்கள் வந்துள்ளன. அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றவும், தேவைப்பட்டால் மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

x